Home இந்தியா பாமகவுக்கு பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் – ஒப்பந்தம் கையெழுத்தானது!

பாமகவுக்கு பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் – ஒப்பந்தம் கையெழுத்தானது!

354
0
SHARE
Ad
அன்புமணி ராமதாஸ்

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பாஜக கூட்டணியில் இணைவது உறுதியான நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காலை இதற்கான தேர்தல் உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

பாமக தலைவர் டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணியின் வற்புறுத்தலாலும், வியூகத்தாலும் இந்தக் கூட்டணி சாத்தியமாகியிருப்பதாகக் கருதப்படுகிறது.

அதன்படி 10 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்படும். கூடுதலாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

#TamilSchoolmychoice

பாஜக- பாமக கூட்டணி முடிவை பாமகவின் பொதுச் செயலாளர் வடிவேலு இராவணன் நேற்று திங்கட்கிழமை (மார்ச் 18) அறிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டத்தில் அன்புமணி ராமதாசும் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி யாருடன் என்ற முடிவில் தந்தை ராமதாஸ் – மகன் அன்புமணிக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது.