Home இந்தியா பாஜக கூட்டணியில் பாமக இணைவது உறுதியானது

பாஜக கூட்டணியில் பாமக இணைவது உறுதியானது

211
0
SHARE
Ad

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பாஜக கூட்டணியில் இணைவது உறுதியாகியிருக்கிறது. இந்த முடிவை பாமகவின் பொதுச் செயலாளர் வடிவேலு இராவணன் அறிவித்தார்.

நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டத்தில் அன்புமணி ராமதாசும் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி யாருடன் என்ற முடிவில் தந்தை ராமதாஸ் (படம்) – மகன் அன்புமணிக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ராமதாசும், அன்புமணியும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை எடுத்தனர் என்றும் வடிவேல் தெரிவித்தார்.