Home இந்தியா திருமாவளவன் சிதம்பரத்தில் – ரவிக்குமார் விழுப்புரத்தில்!

திருமாவளவன் சிதம்பரத்தில் – ரவிக்குமார் விழுப்புரத்தில்!

146
0
SHARE
Ad
தொல்.திருமாவளவன்

சென்னை : திமுக கூட்டணியில் 4 தொகுதிகள் வரை கேட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஒரு வழியாக 2 தனித் தொகுதிகளை ஏற்றுக்கொண்டது. இரண்டு தொகுதிகளிலும் சொந்த பானை சின்னத்தில் போட்டியிடுகிறது.

மூன்றாவதாக பொதுத் தொகுதி ஒன்று தேவை என விசிக தலைவர் விடுத்த கோரிக்கையை ஸ்டாலின் இந்த முறை ஏற்றுக் கொள்ளவில்லை. விசிகவுக்கு வழங்கப்பட்ட 2 தொகுதிகளுமே தனித் தொகுதிகள்.

இந்தியத் தேர்தல் அமைப்பை பின்தொடர்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவதற்கு என்றே சில தொகுதிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். அவை ‘தனி’ தொகுதிகள் என அழைக்கப்படும். இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கண்டிப்பாக பட்டியல் இன சமூகத்தினராக இருக்க வேண்டும். மற்ற சமூகத்தினர் இந்தத் தொகுதியில் போட்டியிட முடியாது. எல்லா சமூகத்தினரும் போட்டியிடக் கூடிய தொகுதிகள் பொதுத் தொகுதிகள் என அழைக்கப்படும்.

#TamilSchoolmychoice

தாங்களும் பொதுத் தொகுதி ஒன்றில் வெற்றி பெற்று வர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருபவர் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். இந்த முறையும் அவருக்கு அந்த வாய்ப்பை திமுக கூட்டணி வழங்கவில்லை.

வழங்கப்பட்டிருக்கும் 2 தொகுதிகளுமே தனி தொகுதிகள். விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரு தொகுதிகளில் மீண்டும் சிதம்பரம் தொகுதியில்- திருமா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம் தொகுதியில் அந்தத் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.