Home இந்தியா வைகோ வகிக்கும் மாநிலங்களவை பதவி மகனுக்கா?

வைகோ வகிக்கும் மாநிலங்களவை பதவி மகனுக்கா?

381
0
SHARE
Ad

சென்னை : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தத் தொகுதி என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. யார் போட்டியிடுவார்கள் என்ற அறிவிப்பும் இதுவரை இல்லை.

அநேகமாக வைகோ மகன் துரை வைகோ அந்த ஒரே தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைகோ தற்போது வகித்துவரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி அடுத்தாண்டு முடிவுக்கு வருகிறது. அந்தப் பதவி துரை வைகோவுக்கு வழங்கப்படலாம் என்ற ஆரூடமும் நிலவுகிறது.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத் தேர்தலில் மற்றொருவருக்கு வாய்ப்பு வழங்கி விட்டு, துரை வைகோவை நேரடியாக மாநிலங்களவை உறுப்பினராக வைகோவுக்குப் பிறகு தேர்வு செய்யும் முடிவையும் வைகோ எடுக்கலாம். அத்தகைய முடிவுக்கு திமுகவும் உடன்பாடு எனக் கூறப்படுகிறது.