Home Featured உலகம் இஸ்தான்புல் இரவு விடுதித் தாக்குதலில் 35 பேர் மரணம்!

இஸ்தான்புல் இரவு விடுதித் தாக்குதலில் 35 பேர் மரணம்!

1160
0
SHARE
Ad

istanbul-attack-1-jan-2017இஸ்தான்புல் நகரில் தாக்குதல் நடத்தப்பட்ட இரவு விடுதியைச் சுற்றி காவல் துறை வாகனங்களும் – அவசர சிகிச்சை வாகனங்களும்….

#TamilSchoolmychoice

கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் போன்ற வேடங்களில் வந்த தாக்குதல்காரர்கள் தானியங்கி துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல்களை நடத்தினர் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எத்தனை பேர் தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது குறித்த விவரங்கள் இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை.

இரவு விடுதியைச் சுற்றி காவல் துறையினரும், அவசர சிகிச்சை வாகனங்களும் (ஆம்புலன்ஸ்) நிறைய அளவில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், இஸ்தான்புல் நகரைச் சுற்றிலும் சுமார் 17 ஆயிரம் காவல் துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பிரபலமான இரவு கேளிக்கை விடுதிகள் அமைந்திருக்கும் ‘இஸ்திக்லால் கடேசி’ என்ற பகுதியில் நடமாடுபவர்களின் கைப்பைகள் சோதனையிடப்படும் அளவுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் அதனையும் மீறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.