Home Featured நாடு பெர்னாமா ‘தமிழ் ஒலி’ வானொலி பிப்ரவரி 4 முதல் தொடக்கம்!

பெர்னாமா ‘தமிழ் ஒலி’ வானொலி பிப்ரவரி 4 முதல் தொடக்கம்!

1490
0
SHARE
Ad

bernama-tamil oli-2கோலாலம்பூர் – மலேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் 24 மணி நேர செய்தி வானொலி, பண்பலை (எஃப்.எம்) 93.9 அலை வரிசையில் ஒலிபரப்பாகி வருகின்றது. தற்போது இதே அலைவரிசையில் ‘தமிழ் ஒலி’ என்ற வானொலி ஒலிபரப்பு தினமும் சில மணி நேரங்களுக்கு ஒலிபரப்பாகவிருக்கின்றது.

தமிழ் ஒலி எதிர்வரும் சனிக்கிழமை பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் தனது ஒலிபரப்பைத் தொடக்குகின்றது.

bernama-tamil oli-launch-1‘தமிழ் ஒலி’ தொடக்க விழாவின்போது பெர்னாமா மூத்த அதிகாரிகளுடன் கெராக்கான் உதவித் தலைவர் கோகிலன் பிள்ளை, சாலே சைட் கெருவாக், சாமிவேலு, டத்தோ கனகா,நியூ இவெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.டி.அரசு, ஐபிஎப் கட்சித் தலைவர் டத்தோ சம்பந்தன், மஇகா தேசிய உதவித் தலைவர் டி.மோகன், டத்தோ சந்திரகுமணன், ஆகியோர்…

#TamilSchoolmychoice

முதல் கட்டமாக தினசரி இரவு 11.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை, இரண்டு மணி நேரங்களுக்கு இந்த ஒலிபரப்பு வழங்கப்படும்.  இது தவிர, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கூடுதலாக,இரண்டு மணி நேரத்திற்கு இந்த ஒலிபரப்பு இடம் பெறும்.

தமிழ் ஒலி வானொலியின் அதிகாரபூர்வத் தொடக்க விழா இன்று வியாழக்கிழமை, காலை 11.00 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள பெர்னாமா தலைமையகக் கட்டிடத்தில் நடைபெற்றது.

bernama-radio-launch-samy vellu-keruakபழைய கால வானொலி மாதிரியில் சாலே சைட் கெருவாக், சாமிவேலு இருவரும் இணைந்து ‘தமிழ் ஒலி’ வானொலி நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்கின்றனர்.

தொடர்பு, பல்ஊடக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சைட் கெருவாக் மற்றும் தெற்கு ஆசியாவுக்கான கட்டுமானத் துறை சிறப்புத் தூதரும் முன்னாள் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ ச.சாமிவேலு இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு இணைந்து தமிழ் ஒலி வானொலி ஒலிபரப்பைத் தொடக்கி வைத்தனர்.

இந்த தமிழ் ஒலிபரப்பை ஏற்று நடத்தும் தனியார் நிறுவனமான நியூவேவ் இவெண்ட்ஸ் சென்டிரியான் பெர்ஹாட்டின் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.டி.அரசு தொடக்க விழா நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றினார்.

bernama-tamil oli-launch-samy velluசாமிவேலு உரை நிகழ்த்துகிறார்….

bernama radio-tamil oli-launchநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட டத்தோ கனகா, ஐபிஎப் தலைவர் டத்தோ சம்பந்தன், டத்தோ டி.மோகன், டத்தோ சந்திரகுமணன்…

bernama radio-tamil oli-staff‘தமிழ் ஒலி’ வானொலி ஒலிபரப்பில் இணையும் சக பணியாளர்களை அறிமுகப்படுத்துகிறார் நியூவேவ் இவெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.டி.அரசு…