கோலாலம்பூர் : எதிர்வரும் சனிக்கிழமை மே 4-ஆம் தேதி தலைநகர் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது ‘தேனிசைத் தென்றல் தேவா 35 ஆண்டுகள்’ என்ற இசைநிகழ்ச்சி. இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க மாஹ்சா பல்கலைக்கழகத்தில் பயிலும் பாடும் திறன் கொண்ட மாணவ மாணவியருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இசையமைப்பாளர் தேவா நடத்தும் இந்த நிகழ்ச்சியில் இங்குள்ள உள்ளூர் கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கவுள்ளார்.
மாஹ்சா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ மாணவியர்களிடையே சிறந்த பாடகர்களை அடையாளம் காணும் பொருட்டு ஒரு தேர்வு போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 30ஆம் தேதி மாஹ்சா பல்கலைக்கழக மண்டபத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா நேரில் கலந்து கொண்டு சிறந்த பாடகர்களை தேர்வு செய்தார். இந்த தேர்வு நிகழ்ச்சியில் மாஹ்சா பல்கலைக்கழக வேந்தர் செனட்டர் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் ஹனிபாவும் கலந்து கொண்டார்.
திரளான அளவில் மாஹ்சா பல்கலைக்கழக மாணவ மாணவியர்கள் இந்த தேர்வுப் போட்டியில் உற்சாகத்துடன் பங்கு பெற்று பெற்றனர்.