Home Photo News சரவணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – மாஹ்சா பல்கலைக் கழகம் வழங்கியது

சரவணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – மாஹ்சா பல்கலைக் கழகம் வழங்கியது

628
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் முன்னணி தனியார் பல்கலைக் கழகங்களில் ஒன்றான மாஹ்சா பல்கலைக் கழகம் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு கௌரவ டாக்டர் வழங்கியது.

இன்று சனிக்கிழமை (மே 6) நடைபெற்ற மாஹ்சா பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில், சரவணனுக்கு இந்த பட்டத்தை வழங்கியது.

மாஹ்சா பல்கலைக்கழகத்தின் வேந்தரான துன் டத்தோஸ்ரீ ஸக்கி பின் துன் அஸ்மி இந்தப் பட்டத்தை வழங்கினார்.

#TamilSchoolmychoice

நாட்டின் அரசியல் துறையிலும், சமூகப் பணிகளிலும் அவர் ஆற்றிய சேவைகளுக்காகவும், மனித வள அமைச்சராக அவர் வழங்கிய பங்களிப்பையும் கௌரவிக்கும் பொருட்டு இந்த பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைக் கழகத்தின் குறிப்பு தெரிவித்தது.