Home One Line P1 சொக்சோ வாரியத் தலைவராக டான்ஸ்ரீ ஹனிபா நியமனம்

சொக்சோ வாரியத் தலைவராக டான்ஸ்ரீ ஹனிபா நியமனம்

698
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிரபல மருத்துவரும், வணிகப் பிரமுகருமான டான்ஸ்ரீ டத்தோ   டாக்டர் ஹாஜி முகமட் ஹனிபா பின் அப்துல்லா சொக்சோ வாரியத்தின் (SOCSO) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான பதவி நியமனக் கடிதத்தை நேற்று திங்கட்கிழமை (ஜூன் 15) சொக்சோ தலைமையகக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கினார்.

டான்ஸ்ரீ ஹனிபா மாஹ்சா பல்கலைக் கழகத்தின் வேந்தருமாவார். அந்தப் பல்கலைக் கழகத்தின் இயக்குநர் வாரியத்தின் நிர்வாகத் தலைவராகவும் அவர் பணியாற்றுகிறார்.

#TamilSchoolmychoice

சொக்சோ எனப்படுவது தொழிலாளர்களுக்கான சமூகநல பாதுகாப்பு அமைப்பாகும். மனிதவள அமைச்சின் கீழ் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

டான்ஸ்ரீ ஹனிபா பல்வேறு சமூக நல நற்பணிகளுக்கும் பெருமளவில் உதவிகள் வழங்கியுள்ளார்.