Home நாடு ஏ.ஆர்.ரஹ்மான் பிரதமர் அன்வாரைச் சந்தித்தார்!

ஏ.ஆர்.ரஹ்மான் பிரதமர் அன்வாரைச் சந்தித்தார்!

569
0
SHARE
Ad
கோலாலம்பூர் : மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பின்போது தொழில் முனைவோர், கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன், அவரின் அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன், ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் ஆகியோரும் உடனிருந்தனர்.

“இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளரும் பாடகருமான சகோதரர் ஏ.ஆ.ரஹ்மானை நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று காலை சந்தித்தேன். அவருடன் தொழில் முனைவோர், கூட்டுறவுத் துறை துணையமைச்சர் சகோதரர் டத்தோ ஆர்.ரமணனும் வருகை தந்தார். எங்களின் கலந்துரையாடல், உள்நாட்டு, அனைத்துலக கலை, இசைத் துறைகள் பற்றியதாக இருந்தது. சகோதரர் ரஹ்மான் தற்போது சூஃபி இசை குறித்து ஆய்வு செய்வதாகத் தெரிவித்தார். இலக்கவியல் (டிஜிடல்) அம்சங்கள் குறித்தும் செயற்கை நுண்ணறிவு குறித்தும் எங்களின் கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தன” என அன்வார் தன் முகநூல் பக்கத்தில் ரஹ்மான் சந்திப்பு தொடர்பான படங்களுடன் பதிவிட்டார்.

அன்வார், ரஹ்மான் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை இங்கே காணலாம்: