Home நாடு ஓராண்டை நிறைவு செய்யும் பெர்னாமா தமிழ் செய்திகள் – வேதமூர்த்தி பாராட்டு

ஓராண்டை நிறைவு செய்யும் பெர்னாமா தமிழ் செய்திகள் – வேதமூர்த்தி பாராட்டு

923
0
SHARE
Ad

புத்ராஜெயா – தொலைக்காட்சியில் பெர்னாமா தமிழ்ச் செய்தி அறிக்கை மறு வடிவம் கொண்டு புத்துயிர் பெற்று தமிழ் நேயர்களின் ஆதரவுடன் வலம் வந்த நிலையில் தற்பொழுது ஓராண்டு நிறைவை எட்டுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

2001-ஆம் ஆண்டில் 15 நிமிட செய்தி அறிக்கையுடன் தொடங்கப்பட்ட பெர்னாமா தமிழ்ச் செய்தி அறிக்கை, தொடர்ந்து ஆஸ்ட்ரோ-வுடன் இணைந்து தொலைக்காட்சி சேவை வழங்கி வந்தாலும் 2015-ஆம் ஆண்டில் பல்வேறு சூழல் காரணமாக நிறுத்தப்பட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்பிக்கை கூட்டணி தலைமையில் புத்தாட்சி மலர்ந்து தகவல் – பல்லூடக ஒளிபரப்புத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள கோபிந்த் சிங் டியோ முயற்சியில் பெர்னாமா தமிழ்ச் செய்தி அறிக்கை 2018, ஜூன் 11-ஆம் நாள் முதல் மீண்டும் ஒளிபரப்பைத் தொடங்கியது.

#TamilSchoolmychoice

தற்பொழுது ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் பெர்னாமா தமிழ்ச் செய்தி ஒலிபரப்பு சேவையைப் பாராட்டுவதாக ஒற்றுமைத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.