கோலாலம்பூர் – வடகொரிய அரசாங்கத்தால், தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 மலேசியர்களில், 2 மலேசியர்கள் நேற்று வியாழக்கிழமை அந்நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் ஐ.நாவின் உலக உணவுத்திட்டத்தின் கீழ், வடகொரியாவில் பணியாற்றி வந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
“அவர்கள் இருவரும் அனைத்துலக அரசாங்கப் பணியாளர்கள், அவர்களின் சொந்த நாடான மலேசியாவைப் பிரதிநிதித்தவர்கள் அல்ல” என்று ஐ.நா அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இதனையடுத்து, அவர்கள் இருவருக்கும் வடகொரியாவில் இருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, நேற்று இருவரும் பெய்ஜிங் வந்தடைந்தனர்.
இதனிடையே, எஞ்சியிருக்கும் 9 மலேசியர்களை விடுவிக்குமாறு மலேசிய அரசு வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.