Home உலகம் போயிங்: 737 ரக விமானத்தின் தயாரிப்பு குறைக்கப்படும்!

போயிங்: 737 ரக விமானத்தின் தயாரிப்பு குறைக்கப்படும்!

759
0
SHARE
Ad

வாஷிங்டன்: அண்மையில், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு நாடுகள் போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானத்துக்கு எதிராக அதன் சேவையை நிறுத்தி வைத்தன.

இதனைத் தொடர்ந்து, போயிங் நிறுவனம் தற்போது, 737 ரக விமானத்தின் உற்பத்தியை தற்காலிகமாக குறைக்கப்போவதாக அறிவித்துள்ளதாக சின்ஜுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திலிருந்து 737 ரக விமானத்தின் தயாரிப்பு இலக்கு மாதத்துக்கு 52- லிருந்து 42-ஆக குறைக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதே போன்று கடந்த அக்டோபர் மாதம் லாயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இருவேறு விபத்துகளுக்கும் போயிங் நிறுவனத்தின் 737 மாக்ஸ் 8 ரக விமானத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறே காரணமென்று தொடக்க கட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.