கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி தனது வாராந்திர பிசியோதெரபி என்னும் தசைநார்களை வலுவூட்டும் சிகிச்சைக்காக நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 24) பிற்பகல் 3 மணியளவில் தேசிய இருததய மருத்துவக் கழகத்தில் (IJN) அனுமதிக்கப்பட்டார்.
அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமரான படாவியின் அலுவலகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் ஓய்வெடுக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நல்ல நிலையில் இருக்கிறார், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அவருக்கான பிரார்த்தனைகளுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள் என்றும் படாவி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.
“தற்போதைக்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அனைவரின் அக்கறைக்கும் நன்றி” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படாவியின் மருமகனான கைரி ஜமாலுடின் தன் இன்ஸ்டாகிராம் பதிவில், அவரது மாமனார் அப்துல்லா படாவி கரோனரி கேர் யூனிட் – என்னும் இருதய அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறினார்.