Home நாடு ரந்தாவில் மசூதிகளைக் காட்டிலும் கோயில்களே அதிகம்!- முகமட் ஹசான்

ரந்தாவில் மசூதிகளைக் காட்டிலும் கோயில்களே அதிகம்!- முகமட் ஹசான்

977
0
SHARE
Ad

ரந்தாவ்: ரந்தாவ் தொகுதியில் வாழும் பல்வேறு மக்களின், குறிப்பாக இந்தியர்களின் தேவைகளை தாம் பூர்த்தி செய்துள்ளதாக முகமட் ஹசான் தெரிவித்தார்.

கடந்த 14 ஆண்டுகளாக, தாம் மந்திரி பெசார் பதிவியில் இருந்த போது, இந்தியர்களுக்கான எல்லா விதமான பிரச்சனைகளையும் தீர்த்து வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்வளவு செய்தும் தம்மை ஓர் இனவெறியாளன் என காட்சிப்படுத்துவதை முகமட் சுட்டிக் காட்டினார்.    

நெகிரி செம்பிலானில் கோயில் பிரச்சனைகள், நிலப் பிரச்சனைகள்,மற்றும் தமிழ் பள்ளிகளுக்கு நிறைய உதவி செய்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இப்பகுதியில், மசூதிகளைக் காட்டிலும் கோயில்களே அதிகமாக உள்ளது” என முகமட் ஹசான் கூறினார்.

இது பற்றி பொது மக்களிடம் வினவிய போது, ஹசான் இம்மாதிரியான பல்வேறு உதவிகளை தங்களுக்குச் செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.