Home நாடு முகமட் ஹாசான் ரந்தாவ் தொகுதியில் வெற்றி

முகமட் ஹாசான் ரந்தாவ் தொகுதியில் வெற்றி

401
0
SHARE
Ad

சிரம்பான் : நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசாரும் அம்னோ துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் ரந்தாவ் தொகுதியில் முன்னிலை வகிப்பதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி வெற்றி பெற்றுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

தேசிய முன்னணி சார்பில் தோக் மாட் என்னும் முகமட் ஹாசான் போட்டியிட அவரை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் ரோஸ்மால் பின் மாலாக்கான் ரந்தாவ் தொகுதியில் போட்டியிட்டார்.

32,890 வாக்குகளைக் கொண்டது நெகிரி செம்பிலானின் ரந்தாவ் தொகுதியாகும். முகமட் ஹாசான் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ரெம்பாவ் தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதியாகும்.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலில் இதே ரந்தாவ் தொகுதியில் 4,510 வாக்குகள் பெரும்பான்மையில் முகமட் ஹாசான் வெற்றி பெற்றார்.