Home நாடு கிளந்தான் : 45 தொகுதிகள் – பாஸ் கட்சியின் புதிய மந்திரி பெசார் யார்?

கிளந்தான் : 45 தொகுதிகள் – பாஸ் கட்சியின் புதிய மந்திரி பெசார் யார்?

432
0
SHARE
Ad

கோத்தாபாரு : கிளந்தான் மாநிலத்தில் 56 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பிற்பகல் 4.00 மணிவரை பதிவாகியிருக்கிறது. கிளந்தான் மாநிலம் 45 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது.

கிளந்தான் மாநிலத்தில் மந்தமான வாக்களிப்பு – பக்காத்தான் ஹாரப்பான், தேசிய முன்னணி இணைந்த ஒற்றுமை அரசாங்கம் சில தொகுதிகளைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு – இவற்றுக்கு நடுவில் மாநிலத்தின் நடப்பு மந்திரி பெசார் டத்தோ அகமட் யாக்கோப், துணை மந்திரி பெசார் மாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமட் யாக்கோப் மாற்றப்படவில்லை – மாறாக அவரே மீண்டும் மந்திரி பெசாராகத் தொடர விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. கிளந்தான் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் யார் என்ற ஆரூடங்கள் எழத் தொடங்கியுள்ளன. முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியானதும் யார் புதிய மந்திரி பெசார் என்பதும் தெளிவாகும்.