Home One Line P2 இந்தோனிசிய விமானம் : 62 பயணிகள் – கடலில் மிதக்கும், உடல் பாகங்கள், பொருட்கள்

இந்தோனிசிய விமானம் : 62 பயணிகள் – கடலில் மிதக்கும், உடல் பாகங்கள், பொருட்கள்

816
0
SHARE
Ad
ஸ்ரீ விஜயா ஏர் விமான நிறுவனத்தின் போயிங் 737 மாதிரி விமானம்

ஜாகர்த்தா : இங்கிருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 737 இரக ஸ்ரீவிஜயா ஏர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று மாயமான நிலையில் அந்த விமானம் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை இழந்து, கடலில் விழுந்ததாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

ஜாகர்த்தாவின் சுகர்னோ – ஹாட்டா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 4 நிமிடங்களிலேயே இந்த விமானம் தொடர்பை இழந்து, கடலில் விழுந்தது.

இதைத் தொடர்ந்து அந்த விமானம் கடற்பகுதியில் விழுந்த இடத்தில் மனித உடல்களின் பாகங்களும், விமானத்தில் இருந்ததாக நம்பப்படும் பொருட்களும் மிதந்து கிடப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

ஜாகர்த்தாவிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் இந்தோனிசியாவின் போர்னியோ பகுதியிலுள்ள பொந்தியானாக் சிட்டியை நோக்கி சென்று கொண்டிருந்த்து.

விமான நிலையக் கட்டுப்பாட்டு கோபுரத் தரவுகளின்படி 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் திடீரென 250 அடிக்கு கீழ்நோக்கி விழுந்தது. அதன் பின்னர் கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பை இழந்தது.

சுமார் 1 நிமிடத்தில் அதலப் பாதாளத்திற்குக் கீழிறங்கிய விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஆகக் கடைசியாக இன்று பிற்பகல் 2.40 மணியளவில் அந்த ஸ்ரீவிஜயா ஏர் விமானம் விமானக் கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பு கொண்டது.