Home One Line P1 கொவிட்-19: புதிய தொற்றுகள் 2,451 பேர் பாதிப்பு – 5 மரணங்கள்

கொவிட்-19: புதிய தொற்றுகள் 2,451 பேர் பாதிப்பு – 5 மரணங்கள்

719
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜனவரி 9) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,451 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

இதில் உள்ளூரில் 2,446 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 5 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 133,559 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று வரையிலான ஒருநாளில் 1,401 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 106,832–ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 26,185 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 177 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 82 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று ஒரேநாளில் 5 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 542-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் அதிகபடியாக சிலாங்கூரில் 564 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அடுத்து சபாவில் 409 சம்பவங்கள் பதிவான நிலையில், ஜோகூரில் 302 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கோலாலம்பூர் மற்றும் கெடாவில் முறையே 198 மற்றும் 65 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் அதிக அளவில் 351 தொற்றுகள் பதிவாகியுள்ளன.