Home நாடு விலையேற்றதிற்கு எதிரான ‘கங்கோங்’ போராட்டம்!

விலையேற்றதிற்கு எதிரான ‘கங்கோங்’ போராட்டம்!

967
0
SHARE
Ad

unnamedகோலாலம்பூர், ஜன 16 – நாட்டில் அத்யாவசியப் பொருட்கள் அனைத்தும் விலையேற்றம் கண்டுள்ள நிலையில், அண்மையில் பிரதமர் நஜிப் துன் ரசாக் ‘கங்கோங்’ கீரையின் விலை குறித்து வெளியிட்ட கருத்து கடந்த சில நாட்களாக இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் கேலியாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், புக்கிட் மெர்தஜாம், ஜாலான் அல்மா பகுதியில் உள்ள இரவு சந்தை அருகே சுமார் 15 பேர் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஒன்று கூடினர்.

நஜிபின் உருவபொம்மை ஒன்றை வைத்திருந்த அவர்கள், 10 கிலோ எடை கொண்ட கன்கோங் கீரையை அந்த உருவ பொம்மையின் வாயில் திணித்தனர்.

#TamilSchoolmychoice

மாச்சாங் பூபுக் சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் கூறுகையில், “அரசாங்கத்தின் விலை ஏற்ற கொள்கைகளுக்கு எதிராக மக்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆதரவாளர் ஒருவரின் தோட்டத்தில் இருந்து இந்த கீரை கொண்டு வரப்பட்டது. விலைவாசியை கட்டுப்படுத்தி மக்களின் சுமையை குறைப்பது தான் அரசாங்கத்தின் கடமை. ஆனால் நஜிப் அரசாங்கத்தை குறை சொல்லாதீர்கள் என்று சொல்கிறார்” என்று தெரிவித்தார்.unnamed (1)

கடந்த ஞாயிற்றுக்கிழமை நஜிப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “தட்பவெட்பம் காரணமாக மீன், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் விலை ஏற்றம் கண்டதற்கு அரசாங்கத்தை குறை சொல்லக்கூடாது. விலை ஏற்றம் கண்ட பொருட்களுக்கெல்லாம் அரசாங்கத்தை விமர்சிக்கும் மக்கள், கங்கோங் உள்ளிட்ட சில பொருட்களின் விலை குறைந்துள்ளது அதற்கு அரசாங்கத்தை பாராட்டவில்லையே” என்று கேள்வி எழுப்பினார்.

நஜிப்பின் இந்த பேச்சு, மக்களிடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நஜிப்பிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த சிறிய அளவிலான ஒன்றுகூடலில், பிரபல துரித உணவான கேஎப்சி (KFC) போன்று KFB என்று எழுத்தப்பட்ட பதாகையை ஒருவர் கையில் ஏந்தி இருந்தார். KFB என்பது Kangkung Fried Belacan என்று அர்த்தமாம்.