அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நாளை காலை 11 மணிக்கு முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும், பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலானோரும் கலந்து கொள்கிறார்கள்.
அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொள்ள வருகிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
கலாமின் இறுதிச்சடங்கில் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கலாமின் இறுதிச்சடங்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் கலந்து கொள்வார் என முன்னர் தகவல் வெளியானது.
ஆனால், தற்போது உடல்நிலை காரணமாக ஜெயலலிதாவால் பங்கேற்க இயலாது என்று அவரது தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.