Home இந்தியா மும்பையில் கடலில் மிதந்து வந்த 1000 ரூபாய்த் தாள்கள்!

மும்பையில் கடலில் மிதந்து வந்த 1000 ரூபாய்த் தாள்கள்!

554
0
SHARE
Ad

gaமும்பை, ஆகஸ்ட்13- மும்பையில் இந்திய நுழைவாயில் (கேட்வே ஆப் இந்தியா) கடற்கரையில் அமர்ந்திருந்த சுற்றுலா பயணிகள், திடீரெனக் கடலில் 1000 ரூபாய்த் தாள்கள் மிதந்து வருவதைக் கண்டு ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தனர்.

உடனடியாகச் சிலர் கடலுக்குள் பாய்ந்து சென்று மிதந்து வந்த ரூபாய்த் தாள்களைச் சேகரித்தனர்.

இந்தச் செய்தி காட்டுத் தீயாகப் பரவி, அங்கே கூட்டம் திமுதிமுவெனத் திரண்டு வந்தது. மீனவர்களும் இதில் சேர்ந்து கொண்டதால், ரூபாய்த் தாள்களை அள்ளுவதில் போட்டா போட்டி ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தகவலறிந்து அங்கே விரைந்து வந்த காவல்துறையினர், சுற்றுலாப் பயணிகளும் மீனவர்களும் கடலில் இருந்து எடுத்த ஆயிரம் ரூபாய்த் தாள்கள் அனைத்தையும் கைப்பற்றினர்.

அவை கள்ளப் பணமா என்று சோதித்த போது, அவை அனைத்தும் உண்மையான பணம் என்பது தெரிந்தது.

ஒருவேளை அவை கருப்புப் பணமாக இருக்கலாம். அவற்றைக் கடலில் கடலில் வீசியது யார்? என்பதைக் கண்டுபிடிக்கக் காவல்துறையினர்   விசாரணை நடத்தி வருகின்றனர்.