ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 22 – பினாங்கில் மெர்டேக்கா கொண்டாட்டத்திற்கு “Bersih, Cekap, Amanah (BCA)” என்பதைக் கருப்பொருளாகக் கொள்வதாக அம்மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் விளக்களித்துள்ளார்.
முன்னதாக, பெர்சே பேரணியை முன்வைத்து தான் அக்கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக எண்ணி, அம்மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மெர்டேக்கா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பினாங்கு பள்ளிகளுக்கு கல்வியமைச்சு தடை விதித்தது.
இந்நிலையில், கல்வியமைச்சிற்கு உண்மையான கருப்பொருள் என்னவென்பது குறித்து மாநில செயலாளர் டத்தோஸ்ரீ ஃபரிசான் டாருஸ் விளக்கமளிப்பார் என்றும் லிம் குறிப்பிட்டுள்ளார்.