Home உலகம் போருக்குத் தயாராகுங்கள் – வீரர்களுக்கு வட கொரிய அதிபர் உத்தரவு!

போருக்குத் தயாராகுங்கள் – வீரர்களுக்கு வட கொரிய அதிபர் உத்தரவு!

717
0
SHARE
Ad

north-koreaபியாங்யாங், ஆகஸ்ட் 22 – தென்கொரிய இராணுவ முகாம் மீது வட கொரியா கடந்த வியாழக் கிழமை தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில் தென் கொரியாவும் வட கொரியா மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தங்கள் நாட்டு இராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும் படி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதற்கிடையே, வட கொரியாவிற்கான ஐநா ஆணையத்தின் தூதர் அன் மயாங் ஹன் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கையில், “வட கொரியா மீது உளவியல் போரையும், ஆத்திரமூட்டும்  செயல்களையும் தென் கொரியா நிறுத்த வேண்டும். அப்படி இல்லை எனில் தக்க பலனை அனுபவித்தே ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும்,தென் கொரியாவிடம் இருந்து இதுவரை எத்தகைய பதில்களும் வராததால் போருக்கான சூழல் உருவாகி உள்ளது. இது குறித்து வட கொரியாவிற்கான சீனாவின் தூதர் ஜி ஜே ர்யொங் கூறுகையில், “தற்போதய சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில் கடந்த 1950-53-ல் நடந்த போரில், எத்தகைய அமைதி உடன்படிக்கையும் ஏற்படவில்லை. போர் நிறுத்தம் மட்டுமே இரு நாடுகளாலும் செய்துகொள்ளப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையில் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.