வாஷிங்டன்: வட கொரியா அணு ஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதிகளை பெறுவதற்காக, இணைய திருட்டு நடவடிக்கைகளில் வட கொரியா ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மொத்தமாக இரண்டு பில்லியன் டாலர்களை வடகொரியா பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வங்கிகள் மற்றும் மின்னணு பணத்தை (கிரிப்டோகரன்சி) மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் இரண்டு பில்லியன் டாலர்களை வட கொரியா திருடியுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான 35 இணைய தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தனது நான்காவது ஏவுகணை சோதனையை நேற்று செவ்வாய்க்கிழமை வட கொரியா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.