Home One Line P2 நான்காவது முறையாக ஏவுகணையை செலுத்தி கோபத்தை வெளிப்படுத்திய வட கொரியா!

நான்காவது முறையாக ஏவுகணையை செலுத்தி கோபத்தை வெளிப்படுத்திய வட கொரியா!

703
0
SHARE
Ad

வட கொரியா: கடந்த இரு வாரங்களில் நான்காவது முறையாக வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

தற்போது, அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி மீண்டும் சோதனை செய்துள்ளதாக வட கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தென் ஹ்வாங்ஹே மாகாணத்தில் இருந்து, கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்கா மற்றும் தென் கொரியா நேற்று திங்கட்கிழமை மேற்கொண்ட கூட்டு இராணுவப் பயிற்சி குறித்த தனது கோபத்தை, வட கொரியா இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், ஏவுகணை சோதனைகள் செய்வதாகவும் கூறி அமெரிக்காவும் மற்றும் உலக நாடுகளும் வட கொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.