Home One Line P1 ஒருமித்த கருத்தா? காட் பாட அறிமுகம் ஒத்திவைக்கப்பட வேண்டும்!

ஒருமித்த கருத்தா? காட் பாட அறிமுகம் ஒத்திவைக்கப்பட வேண்டும்!

842
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னதாக சீனம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் பாடப்புத்தகத்தில் காட் கலையை அறிமுகப்படுத்த இருக்கும் அரசாங்கத்தின் முடிவின் சம்பந்தமாக 12 அரசு சாரா நிறுவனங்களுக்கும், துணைக் கல்வி அமைச்சர் தியோ நி சிங் ஆகியோருக்கு இடையில் ஒருமித்த கருத்து எழுந்ததாகக் கூறப்பட்டது.

ஆயினும், தற்போது அப்பாடம் குறித்த யோசனையை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று சீன கல்வியாளர் குழுவான டோங் சோங் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை அக்குழுக்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து,  ஜாவி படிக்கும் பாடமாக கற்பிக்கப்படாது எனவும், அடுத்த ஆண்டு முதலே மாணவர்களுக்கு அப்பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஒப்புக் கொண்டதாக தியோ கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், சீன கல்வியாளர் குழுவான டோங் சோங், இது சம்பந்தமான முழு முயற்சியும் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

சீன மற்றும் தமிழ் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம். அச்சந்திப்பின் போது, ​​தேசிய வகை பள்ளிகளில் ஜாவி எழுத்தை கற்பிப்பதை எதிர்ப்பதில் எங்களின் உறுதியான நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாகக் கூறினோம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முதல், ஐந்தாம் வகுப்பு தேசிய மொழி பாடநூலில் மாணவர்களை ஜாவி எழுத்து அடிப்படைகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தியது. மேலும், அதைக் கற்றுக் கொள்ளும்படி அவர்களிடம் கேட்கவில்லை. இது ஏற்றுக் கொள்ளத்தக்கது.” என்று அது வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளது.

காட்டின் அறிமுகம் மேலும் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே, அது நிலுவையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் துணை அமைச்சருக்கு எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம். பள்ளிகளில் ஜாவி அடிப்படைகளை வெளியிடுவதற்கு முன்பு இதைப் பற்றி விவாதிக்க அவர்கள் அனைத்து சாராரிடமும் பேச வேண்டும்.” என்று அது கூறியது.

மேலும், எதிர்காலத்தில், வெவ்வேறு இனக்குழுக்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பெரிய அல்லது முக்கியமான கல்வி பிரச்சனைகள் குறித்து, தொடர்புடைய கல்வி குழுக்களுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் அவர்கள் ஒப்புக் கொண்டதாக அது குறிப்பிட்டிருந்தது.