Home One Line P1 அசிஸ் சம்பந்தப்பட்ட 144.6 மில்லியன் வழக்கு விசாரணை செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கும்!

அசிஸ் சம்பந்தப்பட்ட 144.6 மில்லியன் வழக்கு விசாரணை செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கும்!

784
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அசிஸ் அப்துல் ரகீமின் 144.6 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்க உள்ளது.

கோலாலம்பூர் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஸுரா அல்வி இன்று புதன்கிழமை காலை ஆவணங்களை பரிமாறிக்கொள்ளும் பணி முடிந்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த முடிவை எடுத்தார்.

அசிஸ் மற்றும் அவரது மூத்த சகோதரர் அப்துல் லத்தீப் ஆகியோருக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்காக அரசு தரப்பு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் என்றும் அரசு தரப்பு துணை வழக்கறிஞர் அஸ்லிண்டா அஹாட் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, இடமாற்ற விண்ணப்பத்தின் முடிவு நிலுவையில் உள்ள வரையில், விசாரணையின் தொடக்கத் தேதியை நிர்ணயிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த விண்ணப்பம் குறித்த புதிய தகவல்கள் இருக்குமாயின், நீதிமன்றத்திற்கு தெரிவிக்கும்படி அவர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் எதிர் தரப்பினருக்கு நினைவூட்டினார்.

பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரான, அசிஸ், கடந்த ஜனவரி மாதம் 144.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 12 கையூட்டு மற்றும் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.