Home நாடு அப்துல் அசிஸ் : 13 குற்றச்சாட்டுகளில் 4-க்கு விலக்கு – 9 குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வாதம் புரிய...

அப்துல் அசிஸ் : 13 குற்றச்சாட்டுகளில் 4-க்கு விலக்கு – 9 குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வாதம் புரிய வேண்டும்

487
0
SHARE
Ad

புத்ராஜெயா: பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரஹீமின் 13 ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கான மேல்முறையீட்டில் அவருக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

அவர் மீதான 13 குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்தது. எனினும் எஞ்சிய 9 குற்றச்சாட்டுகளைக்கு அவர் எதிர்வாதம் புரிய வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ன் மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஓரளவு அனுமதித்துள்ளது.

#TamilSchoolmychoice

நீதிபதி கமாலுதீன் முகமட் சைட் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு, இன்று திங்களன்று (செப். 5) இந்த தீர்ப்பை ஒரு மனதாக வழங்கியது.

அப்துல் அசிஸ் கெடா மாநிலத்தில் உள்ள பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.