Home One Line P1 புதிய புரோட்டோன் சாகா வாகனம் வெளியீடு கண்டது!

புதிய புரோட்டோன் சாகா வாகனம் வெளியீடு கண்டது!

966
0
SHARE
Ad
படம்: நன்றி பவுல் டான்

கோலாலம்பூர்: புரோட்டான் சாகாவின் புதிய வடிவமைப்பை நேற்று செவ்வாய்க்கிழமை புரோட்டோன் அறிமுகப்படுத்தியது.

ஆரம்பக்கட்ட விலையாக 32,800 ரிங்கிட் (ஸ்டாண்டர்ட் எம்டி), 35,800 ரிங்கிட் (ஸ்டாண்டர்ட் ஏடி) மற்றும் 39,800 ரிங்கிட் (பிரீமியம் ஏடி) என மூன்று வகைகளில் கவர்ச்சிகரமான மாறுபாடுகளை இம்முறை புரோட்டோன் சாகா கொண்டுள்ளது.

புரோட்டானுக்கு ஒத்த மற்றும் சமீபத்திய வடிவமைப்புகள் மற்றும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த மாதிரியின் வெளியீட்டை அனைத்துலக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ டேரல் லீக்கிங் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

புரோட்டோனின் சின்னமான மற்றும் சிறந்த விற்பனையான மாதிரியின் சமீபத்திய பதிப்புகளை, அதாவது புதிய பாணி, நான்கு வேக தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் முதல் தர ஸ்மார்ட் அம்சங்கள் போன்ற அம்சங்களுடன் புரோட்டோன் சாகா வாகனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.