Home One Line P1 புரோட்டோன் தொடர்ந்து 4 மாதங்களாக அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளது

புரோட்டோன் தொடர்ந்து 4 மாதங்களாக அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளது

708
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் (புரோட்டோன்) விற்பனை ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் வரை வேகமாக அதிகரித்துள்ளது. தேசிய வாகன நிறுவனம் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ஆண்டுக்கு ஆண்டு சாதகமான விற்பனை விகிதங்களை அடைந்துள்ளது.

புரோட்டோன் ஏடார் தலைமை நிர்வாக அதிகாரி ரோஸ்லான் அப்துல்லா கூறுகையில், செப்டம்பர் மாதத்தில் மொத்த விற்பனை 11,935- ஆக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இது 2020- ஆம் ஆண்டில் இரண்டாவது அதிகபட்ச விற்பனை என்று அவர் கூறினார். கடந்த ஆகஸ்டு மாதத்தை விட இது 4.9 விழுக்காடாகும் என்றும், 2019- ஆம் ஆண்டில் இதே மாதத்தில் 12.5 விழுக்காடு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“புரோட்டோன் இந்த ஆண்டு 73,607 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 21.6 விழுக்காடு சந்தைப் பங்கிற்கு சமமானது மற்றும் மலேசிய வாகனத் தொழிலில் இரண்டாவது இடத்தில் உள்ளது” என்று புரோட்டோன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மூன்று புரோட்டோன் வாகனங்கள் அந்தந்த பிரிவுகளுக்கு அதிக விற்பனையை பதிவு செய்துள்ளன.

மலேசியாவின் சிறந்த விற்பனையில் உள்ள எஸ்யூவி ரக வாகனமான, புரோட்டோன் எக்ஸ் 70, சிறந்த விற்பனையை பதிவு செய்துள்ளது. அதாவது 2,849 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.

இது 2020- ஆம் ஆண்டில் இரண்டாவது சிறந்த விற்பனை செயல்திறன் ஆகும். புரோட்டோன் பெர்சோனா மற்றும் புரோட்டோன் எக்ஸோராவும் அந்தந்த பிரிவுகளில் அதிகம் விற்பனையாகும் வாகனங்களாக இருக்கின்றன.

புரோட்டோன் எக்ஸ் 50 இரண்டு வாரங்களில் 20,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. புரோட்டோன் எக்ஸ் 50 புரோட்டோனின் சமீபத்திய மாதிரியாகும்.

“புரோட்டோன் எக்ஸ் 50- இல் அதிக அக்கறை காட்டிய வாடிக்கையாளர்களுக்கு புரோட்டோன் நன்றி கூற விரும்புகிறது. 2020 கடைசி மூன்று மாதங்களில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான உற்பத்தி செயல்முறையில் புரோட்டோனில் நாங்கள் கவனம் செலுத்துவோம். அதே நேரத்தில் தயாரிப்பு தரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்போம், ” என்று ரோஸ்லான் கூறினார்.