Home One Line P1 பாகிஸ்தான் சந்தையில் புரோட்டோன் சாகா கார் நுழைகிறது

பாகிஸ்தான் சந்தையில் புரோட்டோன் சாகா கார் நுழைகிறது

626
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தனது புரோட்டோன் சாகா காரை அனைத்துலக சந்தையில் சேர்த்துள்ளது.

தேசிய கார் தயாரிப்பாளரான புரோட்டோன், பாகிஸ்தான் சந்தைக்காக மூன்று புரோட்டோன் சாகா மாதிரிகள் விற்கப்படுவதாகக் கூறியது. தற்போது, ​​புருணை, வங்காளதேசம், எகிப்து, ஜோர்டான், கென்யா, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய எட்டு அனைத்துலக சந்தைகளில் சாகா வெற்றிகரமான காலடி வைத்திருக்கிறது என்று அது ஓர் அறிக்கையில் கூறியது.

பாகிஸ்தானில் இயங்கலை வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தானுக்கான மலேசிய தூதர் இக்ரம் முகமட் இப்ராகிம், மலேசியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக பாகிஸ்தானில் புரோட்டானின் செயல்பாடு இருக்கக்கூடும் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு டிசம்பரில் புரோட்டான் எக்ஸ் 70 பாகிஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சாகா காரும் விற்பனைக்கு கால் பதித்துள்ளது.