Home One Line P1 2019 முதல் 550 குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கைது!

2019 முதல் 550 குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கைது!

627
0
SHARE
Ad

ஷா ஆலாம்: 2019 முதல் இந்த ஆண்டு மார்ச் வரையில் பல்வேறு குற்றங்களுக்காக 550 குண்டர் கும்பல் உறுப்பினர்களை சிலாங்கூர் காவல் துறை கைது செய்துள்ளதாக அதன் தலைவர் அர்ஜுனைடி முகமட் தெரிவித்தார்.

08, 21, 24 மற்றும் 36 எண் குண்டல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடு மற்றும் வணிக வளாக உரிமையாளர்களிடமிருந்து பணம் பறித்தல் ஆகியவற்றுடன், சண்டைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளும் இதில் அடங்கும்.

#TamilSchoolmychoice

“கூடுதலாக, கொலை, கொலை முயற்சி, கலவரம், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், கொள்ளை மற்றும் பிற வன்முறைக் குற்றங்கள் தொடர்பான 175 வழக்குகள் உள்ளன,” என்று அவர் இன்று சிலாங்கூர் காவல் துறை தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட கும்பல் உறுப்பினர்கள் 20 முதல் 40 வயதிற்குட்பட்ட உள்ளூர் ஆண்கள் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மீதமுள்ள புக்கிட் ராஜா 24 குண்டர் கும்பல் உறுப்பினர்கள் தீவிரமாக குற்றங்களைச் செய்து, மாணவர்கள் உட்பட புதிய உறுப்பினர்களை பாதுகாப்பு, பணம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் ஈர்ப்பதாக அவர் கூறினார். இவர்களை காவல் துறையினர் கண்காணித்து வருவதாக அர்ஜுனைடி கூறினார்.

புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில் கும்பல், பல பள்ளிகளை குறி வைப்பதாக  காவல் துறை அடையாளம் கண்டுள்ளது  என்று அவர் தெரிவித்தார்.

“இவர்கள் மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை, பொழுதுபோக்கு விற்பனை நிலையங்கள், உடல் பிடிப்பு மற்றும் சூதாட்ட நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் நிதி ஆதாரங்களைப் பெறுகிறார்கள். அவர்களின் அறிவுறுத்தல்கள் நிராகரிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆபத்தை விளைவித்து காயங்களை ஏற்படுத்துகின்றனர், ” என்று அவர் கூறினார்.