Home One Line P2 வோல்வோ கார் : 2030-க்குள் முழுமையாக மின்சாரப் பயன்பாட்டுக்கு மாறும்

வோல்வோ கார் : 2030-க்குள் முழுமையாக மின்சாரப் பயன்பாட்டுக்கு மாறும்

720
0
SHARE
Ad

இலண்டன் : வோல்வோ வாகனங்கள் உலகப் புகழ்பெற்றவை. ஸ்வீடன் நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் வோல்வோ கார்கள் மலேசியாவிலும் மிகவும் பிரபலம்.

குறிப்பாக, வோல்வோ கார்கள் மிகவும் பாதுகாப்பானவை என்பதும் நிரூபிக்கப்பட்ட கூற்று.

உலகம் முழுவதும் மின்சாரக் கார்களுக்கு மாறிவரும் நிலையில், வோல்வோ நிறுவனமும் எதிர்வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மின்சாரக் கார்களை மட்டுமே தயாரிக்கும் நிறுவனமாக உருமாறும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும் கூடிய விரைவில் வோல்வோ கார்களை நேரடியாக இணையம் வழியாக பயனர்கள் வாங்கக் கூடிய சூழலும் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2030-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் போன்ற இயற்கை எரிவாயுவைக் கொண்டு இயங்கும் கார்களின் தயாரிப்பை வோல்வோ நிறுத்திக்கொள்ளும்.