Home One Line P1 அம்னோவின் முடிவு, தேசிய கூட்டணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்

அம்னோவின் முடிவு, தேசிய கூட்டணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்

496
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்றிரவு பெர்சாத்து உச்சமன்றக் குழு கூட்டம் அம்னோவுடனான கட்சியின் உறவு குறித்து தெளிவான முடிவை எடுக்கவில்லை.

எவ்வாறாயினும், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியுடன் ஒத்துழைக்கப்போவதில்லை என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கங்களை பெர்சாத்து தீவிரமாக எடுத்துக் கொண்டதாக அதன் செயலாளர் ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

கடிதத்தின் உள்ளடக்கங்கள் எதிர்காலத்தில் பெர்சாத்துவுக்கும் அம்னோவிற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று  அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அம்னோ, பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணிக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்புக்கு பெரும் தாக்கங்களைக் கொண்டிருப்பதால் பெர்சாத்து கடிதத்தின் உள்ளடக்கங்களை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.

“இது சம்பந்தமாக, அடுத்த கூட்டத்தில் தேசிய கூட்டணி கட்சிகளான பாஸ், ஸ்டார், எஸ்ஏபிபி மற்றும் கெராக்கான் ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து உறவை வலுப்படுத்த பெர்சாத்து தொடர்ந்து கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது,” அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.