Home One Line P1 லிமா’21 நடைபெறாது, 2023-இல் நடத்தப்படும்

லிமா’21 நடைபெறாது, 2023-இல் நடத்தப்படும்

633
0
SHARE
Ad

கோலாலம்பூர்: லங்காவி அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி 2021 (LIMA’21) இந்த ஆண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு அது நடைபெறாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“2023- ஆம் ஆண்டில் லிமா கண்காட்சியை நடத்துவதற்கான முடிவு இன்னும் திட்டத்தில் உள்ளது. இதுவரை எந்த மாற்றமும் இல்லை. தவிர, 2023 வாக்கில், உலகளவில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டு, அந்த நேரத்தில் (2023) நாம் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்திருக்கலாம், எனவே கண்காட்சியத் திறக்க வாய்ப்பு அதிகமானது, ” என்று அவர் கூறினார்.

லிமா ’21 கண்காட்சி இந்த ஆண்டு மார்ச் 16 முதல் 20 வரை நடைபெற இருந்தது. இது கடந்த 1991-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2019-இல் நம்பிக்கை கூட்டணி ஆட்சியின் போது இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. அப்போது, 32 நாடுகளிலிருந்து, சுமார் 406 தற்காப்பு சம்பந்தமான நிறுவனங்கள் பங்கெடுத்தன. அவற்றில் 206 உள்ளூர் நிறுவனங்களும், 200 அனைத்துலக நிறுவனங்களும் அடங்கும்.