ராஜா பெர்மாய்சுரி அகோங் துங்கு ஹாஜா அசிசா அமினா மைமுனா இஸ்காண்டாரியாவுடன் மதியம் 12.40 மணிக்கு மருத்துவனை விட்டு வெளியேறினார் என்று டத்தோ பெங்கேலோலா பிஜயா டிராஜா டத்தோ அகமட் பாடில் ஷாம்சுடின் தெரிவித்தார்.
“மாமன்னர் படிப்படியாக மீண்டுள்ளார். ஐஜேஎன் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், இஸ்தானா நெகாராவில் மாமன்னர் ஓய்வெடுப்பார், “என்று பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
செப்டம்பர் 22- ஆம் தேதி உணவு நச்சு மற்றும் பிற சிகிச்சைக்காக மாமன்னர் செப்டம்பர் 21- ஆம் தேதி ஐஜேஎன்- இல் அனுமதிக்கப்பட்டார்.
Comments