Home One Line P1 ஜாவி எழுத்தழகியல்: கல்வி அமைச்சு, அரசு சாரா நிறுவனங்கள் ஒருமித்த கருத்தை எட்டின!

ஜாவி எழுத்தழகியல்: கல்வி அமைச்சு, அரசு சாரா நிறுவனங்கள் ஒருமித்த கருத்தை எட்டின!

835
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 12 அரசு சாரா நிறுவனங்களுக்கும், துணை கல்வி அமைச்சர் தியோ நீ சிங்கிற்கும் இடையிலான, ஜாவி எழுத்தழகியல் குறித்த கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை ஒருமித்த கருத்தை எட்டியது

அடுத்த ஆண்டு முதலே தொடக்கப் பள்ளிகளில் காட் கலை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இது காட் கலையை பயிலும் முறையை மட்டுமே கொண்டிருக்கும். ஜாவி மொழியினைக் கற்கும் முறையாக இருக்காது. இதுவே, அவர்களுக்கு ஒரு விரிவான விளக்கத்தை அளித்திருக்கும்.என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தியோ கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், அடுத்த ஆண்டு தேர்வு மூலம் மாணவர்கள் காட் கலை மதிப்பீடு செய்யப்படமாட்டார்கள் என இந்த கலந்துரையாடலின் போது ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்த விவகாரத்தில் அரசு சாரா அமைப்புகளின் நிலைப்பாடு இதுதான். நாங்கள் (மலேசிய கல்வி அமைச்சு) இதனை ஏற்றுக் கொள்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

சீனம் மற்றும் தமிழ் தேசிய வகை பள்ளிகள் உட்பட நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள நான்காம் ஆண்டு பாடப்புத்தகங்களில் ஜாவி எழுத்தழகியல் பயன்படுத்துவதை தியோ முன்பு அறிவித்திருந்தார்.