Home One Line P1 4-வது நாளாக அயர்லாந்து சிறுமியைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது!

4-வது நாளாக அயர்லாந்து சிறுமியைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது!

733
0
SHARE
Ad

நீலாய்: காணாமல் போன அயர்லாந்து சிறுமி, நோரா அன் குய்ரின் (15) என்பவரை கண்டுபிடிக்க தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு 72 மணி நேரம் ஆகிறது.

நான்காவது நாளாக தொடரப்படும் இந்த தேடும் நடவடிக்கை, சுற்றியுள்ள மலைகள் மற்றும் சிற்றோடைகளை உள்ளடக்கியதாக உள்ளது. மேலும், அவர்கள் தங்கியிருந்த தங்கும் விடுதி சுற்றியுள்ள பகுதிக்கு  மட்டுப்படுத்தப்படவில்லை.

புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் (விசாரணை  மற்றும் சட்டம்) டத்தோ சலேஹுடின் அப்துல் ரஹ்மான் பெர்னாமாவைச் சந்தித்தபோது, ​​அயர்லாந்து சிறுமியைக் கண்டுபிடிப்பது எளிதான காரியம் அல்ல என்று விளக்கினார்.

#TamilSchoolmychoice

சிறுமியை விரைவில் கண்டுபிடிப்பதற்காக, இன்று புதன்கிழமை நடவடிக்கைகளுக்கு ஒராங் அஸ்லி உள்ளிட்ட உள்ளூர் மக்களும் உதவியுள்ளனர், அவர்கள் நோராவை கண்டுபிடிக்க உதவ முன்வந்தள்ளனர் என்று அவர் கூறினார்.

நேற்றைய நிலவரப்படி, எஸ்ஏஆர் நடவடிக்கைகளில் 178 பணியாளர்கள் ஈடுபட்டனர் என்றும்,  இந்நேரத்தில் இது போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டார். தேவைப்பட்டால் சக்தியை அதிகரிக்கும் வாய்ப்பை நிராகரிக்கவில்லை என்றும் சலேஹுடின் கூறினார்.

நோரா காணாமல் போனது குறித்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அனைத்து தரப்பினரும் தங்களின் ஊகக் கருத்துகளை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.