Home உலகம் நியூயார்க் சாலைகளில் நடந்து சென்ற அன்வார் இப்ராகிம்

நியூயார்க் சாலைகளில் நடந்து சென்ற அன்வார் இப்ராகிம்

430
0
SHARE
Ad

நியூயார்க் : ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 78-வது ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ள நியூயார்க் வந்திருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், முதலீட்டாளர்களுடனான சந்திப்பு ஒன்றையும் நடத்தினார். மேலும் பல வணிகப் பிரமுகர்களையும் தனித் தனியாகவும் குழுவாகவும் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

தான் தங்கியிருந்த தங்கு விடுதியில் இருந்து முதலீட்டாளர்களுடனான சந்திப்பு நடைபெறவிருந்த அரங்கம் அருகாமையில் இருந்ததால் தனது குழுவினருடன் அன்வார் நியூயார்க்கின் சாலையில் இறங்கி நடைப் பயணமாக அங்கு சென்று சேர்ந்தார்.

இதற்கிடையில் பல அயல்நாட்டுத் தலைவர்களையும் அவர் சந்தித்தார். தாய்லாந்து பிரதமர் சிரேத்தா தவிசின், ஈராக்கிய பிரதமர் முகமட் ஷியா அல் சுடானி ஆகியோரையும் அவர் சந்தித்து பரஸ்பர நல்லுறவுகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

தாய்லாந்து பிரதமருடன்…
ஈராக்கிய பிரதமருடன்….
அமெரிக்க முன்னாள் துணையதிபர் கெரியுடன்