Home நாடு வீ கா சியோங், மீண்டும் மசீச தலைவராக வெற்றி

வீ கா சியோங், மீண்டும் மசீச தலைவராக வெற்றி

439
0
SHARE
Ad
மசீச தேர்தலில் வாக்களிக்கும் வீ கா சியோங் – அவரின் துணைவியார்

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) தேர்தல்களில் டத்தோ வீ கா சியோங் தன் தேசியத் தலைவர் பதவியை மீண்டும் தற்காத்துக் கொண்டார்.

ஆகக் கடைசியான நிலவரங்களின்படி அவருக்கு 13,270 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டத்தோ டான் சோங் செங் 1,197 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

கட்சியின் துணைத் தலைவராக டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

தேசிய உதவித் தலைவர்களாக நடப்பு உதவித் தலைவர்கள் டத்தோ லிம் பான் ஹோங், டத்தோ டான் தெய்க் செங் இருவரும் மீண்டும் வெற்றி பெற்றனர்.

டத்தோ வீ ஜெக் செங், டத்தோ லாரன்ஸ் லோ ஆகிய இருவரும் உதவித் தலைவர்களாக வெற்றி பெற்ற புதுமுகங்கள் ஆவர்.

29,000 பேராளர்கள் பங்கு கொண்ட இந்தத் தேர்தலில் சுமார் 56 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

மசீசவின் ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் அக்டோபர் 21, 22-ஆம் தேதிகளில் நடைபெறும்.