Home உலகம் டிரம்ப் தென் கொரியா வருகை, கிம் ஜோங்கை சந்திக்க சாத்தியமில்லை!

டிரம்ப் தென் கொரியா வருகை, கிம் ஜோங்கை சந்திக்க சாத்தியமில்லை!

787
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த வார இறுதியில் தென் கொரியா பயணத்தின் போது வட கொரிய தலைவர் கிம் ஜோங் உனை சந்திப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் நேற்று திங்களன்று அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிக் கூறியதை மேற்கோளிட்டுள்ளது.

ஜப்பானில் நடைபெறும் ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டிரம்ப் சியோலுக்கு வருகைப் புரிய உள்ளார்.

இந்த வருகையானது கொரியா இடையேயான எல்லையில் டிரம்பிற்கும் கிம்மிற்கும் இடையே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.

#TamilSchoolmychoice

இராணுவம் இல்லாத மண்டலத்திற்கு டிரம்ப்பின் வருகை குறித்து கருத்து தெரிவித்த அவர், அதிபரின் முழு பயண விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.