Home இந்தியா தங்க தமிழ் செல்வன் விரைவில் கட்சியை விட்டு நீக்கப்படுவார்!- டிடிவி தினகரன்

தங்க தமிழ் செல்வன் விரைவில் கட்சியை விட்டு நீக்கப்படுவார்!- டிடிவி தினகரன்

874
0
SHARE
Ad

சென்னை: தங்க தமிழ் செல்வன் அமமுக கட்சியை விட்டு நீக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அமமுக கட்சி நிருவாகி ஒருவரிடம், டிடிவி தினகரனை எச்சரிக்கும் விதமாக தங்க தமிழ் செல்வனின் தொலைபேசி உரையாடல் நேற்று திங்கட்கிழமை சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மகனை எதிர்த்து, அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ் செல்வன், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை அடைந்தார்இதனையடுத்து, தங்க தமிழ் செல்வன் மீண்டும் அதிமுகவுக்கே செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாயின.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று வெளியான உரையாடலில் அவர் டிடிவி தினகரனை அவமரியாதையாகப் பேசியது பரவலாகப் பகிரப்பட்டது. இதனிடையே, இது குறித்து கருத்துரைத்த டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்றும், அவர் பேசுவது போல ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டார் என்றும் கூறியுள்ளார்.