Home நாடு மாமன்னர் முன்னிலையில் எம்ஏசிசி தலைவராக லத்தீஃபா கோயா பதவியேற்றார்!

மாமன்னர் முன்னிலையில் எம்ஏசிசி தலைவராக லத்தீஃபா கோயா பதவியேற்றார்!

779
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வழக்கறிஞர் லத்தீஃபா கோயா இன்று செவ்வாய்க்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் பதவியேற்றார். 

கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி இரண்டு ஆண்டு காலத்திற்கு 14-வது எம்ஏசிசி தலைவராக நியமனம் செய்த கடிதத்தை மாமன்னர் சுல்தான் அப்துல்லா அவரிடம் வழங்கினார்.

2009-ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டம் பிரிவு 5 (7) கீழ் ஒவ்வொரு தலைமை ஆணையரும் மாமன்னர் முன் பதவியேற்க வேண்டும்.

#TamilSchoolmychoice

முன்னதாக, முன்னாள் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் சுக்ரி அப்துல் தமது சேவையை முன்கூட்டியே முடித்துக் கொள்வதாக அறிவித்தன் பேரில் பிரதமர் லத்தீஃபா கோயாவை புதிய தலைவராக நியமித்தார்.