Home நாடு கட்சி முடிவில் உடன்பாடு இல்லையென்றால் சுரைடா வெளியேறலாம்!- பிகேஆர் மகளிர் அணி துணைத் தலைவர்

கட்சி முடிவில் உடன்பாடு இல்லையென்றால் சுரைடா வெளியேறலாம்!- பிகேஆர் மகளிர் அணி துணைத் தலைவர்

689
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கட்சியின் கூட்டு முடிவை மதிக்காவிட்டால், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் கட்சியை விட்டு வெளியேறலாம் என்று பிகேஆர் கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவர் பைசா அரிபின் கூறினார்.

தாம் கட்சியின் தலைவராக இருந்திருந்தால், சாந்துபோங் தொகுதியின் பிகேஆர் இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ்சை எப்போதோ கட்சியை விட்டு நீக்கம் செய்திருப்பார் என்று சுரைடா கூறியதற்கு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

கட்சியின் அரசியல் பணியகக் கூட்டத்தில் கட்சியின் முடிவிற்கு ஒப்புதல் வழங்கி விட்டு வெளியில் இவ்வாறு கருத்துரைப்பது சரியானதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஒரு தலைவராக அவர் கூட்டத்தின் முடிவுக்கு ஏற்ப இருக்க வேண்டும். கூட்டத்தின் போது எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்காது வெளியில் இவ்வாறு பேசுவது சரியில்லை. இப்போது அவர் தம்மை பெரிதாக உணர்கிறாரா?” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.