Home நாடு “நான் தலைவராக இருந்திருந்தால் ஹசிக் எப்போதோ கட்சியை விட்டு நீக்கப்பட்டிருப்பார்”- சுரைடா

“நான் தலைவராக இருந்திருந்தால் ஹசிக் எப்போதோ கட்சியை விட்டு நீக்கப்பட்டிருப்பார்”- சுரைடா

623
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒருவேளை தாம் பிகேஆர் கட்சியின் தலைவராக இருந்திருந்தால், சாந்துபோங் பிகேஆர் இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ்சை எப்போதோ கட்சியை விட்டு நீக்கப்பட்டிருப்பார் என்று பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.

ஹசிக்கை கட்சியை விட்டு நீக்கும் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆனால், கட்சி செயல்முறைக்கு உட்பட்டு நடக்கப்போவதாக கூறியுள்ளது. அவ்வாறே பின்பற்றட்டும்என்று அவர் புத்ராஜெயாவில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த ஜூன் 19-ஆம் தேதியன்று, ஹசிக்கின் பகிரங்க வாக்குமூலத்தைத் தொடர்ந்து கட்சியின் நல்லெண்ணத்தை அவமானப்படுத்தியதற்காகவும் அவமதித்ததற்காகவும் உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்யுமாறு சுரைடா கூறியிருந்தார்.

இருப்பினும், அதே நாளில் கூடிய பிகேஆர் அரசியல் பணியகம் ஹசிக்கிற்கு ஒரு காரணக் கடிதத்தை மட்டுமே கொடுக்க முடிவு செய்து, அந்தக் கடிதத்திற்கு பதிலளிக்க 14 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது. முன்னதாக, மலேசிய பத்திரிக்கையாளரான அப்துல் காடிர் ஜாசின், பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி பதவி விலகாததை தொடர்ந்து பதிவொன்றை தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.