Home நாடு சுரைடா பதவி விலக வேண்டும் – மொகிதின் யாசின் வலியுறுத்துகிறார்

சுரைடா பதவி விலக வேண்டும் – மொகிதின் யாசின் வலியுறுத்துகிறார்

630
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா கமாருடின் பெர்சாத்து கட்சியை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து அமைச்சரவையில் அவரது நிலை குறித்து விவாதிக்க பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை சந்திப்பதற்காக காத்திருக்கிறார்.

மூலத்தொழில் அமைச்சர் சுரைடா, பெர்சாத்து கட்சியின் சார்பில் அந்தப் பதவியை வகித்தார் என்பதால் அவர்  மாற்றப்பட வேண்டும் என அவர் கருதுகிறார்.

“வேறு வேட்பாளரை தேர்ந்தெடுப்பது பிரதமரின் உரிமை, அது நிகழும்போது சுரைடாவுக்குப் பதிலாக பொருத்தமான வேட்பாளரை நாங்கள் பெயர் குறிப்பிடுவோம்” என்று நேற்று நடைபெற்ற 6-வது தேசிய மீட்பு மன்றம் (NRC) கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் மொகிதின் கூறினார்.

#TamilSchoolmychoice

பெர்சாத்து புதிய முகத்தை நியமிக்குமா என்று கேட்டபோது, ​​வேட்பாளர் அறிவிக்கப்படும்வரை காத்திருக்குமாறு முன்னாள் பிரதமருமான மொகிதின் தெரிவித்தார்.

பிரதமருடனான சந்திப்புக்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் மொகிதின் குறிப்பிட்டார்.

மே 26 அன்று, சுரைடா பெர்சாத்துவை விட்டு வெளியேறி, பார்ட்டி பாங்சா மலேசியாவில் சேருவதற்கான தனது முடிவை அறிவித்தார், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து பிரதமரிடம் விவாதிக்கவிருப்பதாகவும் கூறினார்.

இஸ்மாயில் சப்ரியின் நிர்வாகத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் சுரைடா கூறியிருந்தார்.