Home இந்தியா சோனியா-ராகுல் மீது பாஜக நடவடிக்கை – ஸ்டாலின் கண்டனம்

சோனியா-ராகுல் மீது பாஜக நடவடிக்கை – ஸ்டாலின் கண்டனம்

748
0
SHARE
Ad

சென்னை :மத்திய அமலாக்கத் துறை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி மீதும், ராகுல் காந்தி மீதும் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களான திருமதி. சோனியா காந்தி மற்றும் திரு. ராகுல் காந்தி ஆகியோரையும் பழிவாங்கும் எண்ணத்தோடு ஒன்றிய பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  நாட்டில் உள்ள மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியாத பாஜக இது போன்ற அரசியல் திசைதிருப்பும் நாடகங்களின் மூலமாக தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் பார்க்கிறது. அரசியல் தலைவர்களை அரசியல் களத்தில் எதிர்கொள்ள வேண்டுமே அல்லாமல் அமலாக்கத்துறையை ஏவி அல்ல” என அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்தார்.