Home கலை உலகம் ஆஸ்ட்ரோ “கொரஞ்ச விலை நிறைஞ்ஜ ஊரு” – தொகுப்பாளர் ரெபிட் மேக் அனுபவங்கள்

ஆஸ்ட்ரோ “கொரஞ்ச விலை நிறைஞ்ஜ ஊரு” – தொகுப்பாளர் ரெபிட் மேக் அனுபவங்கள்

655
0
SHARE
Ad


ரெபிட் மேக், தொகுப்பாளர்:

1. கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவம் எப்படி இருந்தது?

ஒரு தொகுப்பாளராக இது எனது முதல் பயண நிகழ்ச்சி. பல புதிய இடங்களுக்குச் சென்ற அனுபவம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முழுப் பயணத்தையும் வேடிக்கையாக மாற்றியச் சிறந்தக் குழுவினர் என்வசம் இருந்தனர்.

ஒவ்வொரு மாநிலத்தைப் பற்றியும், குறிப்பாக அவர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றியும் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். மறக்க முடியாதத் தருணங்கள் நிறைய இருந்தாலும், நாங்கள் தாமான் நெகாரா, பகாங்கிற்குச் சென்றது மிகவும் குறிப்பிடத்தக்க அனுபவம் என்றுதான் கூறுவேன். ஒரு நாள் இரவு நடுக்காட்டில் இருந்தக் காவற்கோபுரத்தில் தங்கினோம். அந்த இடம் நகரத்திலிருந்துச் சற்றுத் தொலைவில் இருந்ததால் தொலைபேசி அல்லது இணைய இணைப்பு இல்லை.

ரேபிட் மேக்
#TamilSchoolmychoice

காலையில் படகு எங்களை அங்கே இறக்கி விட்டது. மறுநாள் காலை வரை முற்றிலும் படகுகள் இருக்காது என்று என்னிடம் கூறப்பட்டது. நாள் அவ்வளவு மோசமாக இல்லை. நாங்கள் ஆற்றங்கரையில் குளித்தோம். எங்களின் சொந்த உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தோம்.

அன்று இரவு எங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்தது. அதிர்ஷ்டவசமாக, முழு நிலவு இருந்தது. ஆனால், நாங்கள் முன்னேற்பாடாக எங்களின் சுய விளக்குகளையும் எடுத்துச் சென்றோம். பயமாக இருந்தாலும், அது உண்மையில் ஒரு வாழ்நாள் அனுபவமாக இருந்தது. மிருகக்காட்சிச்சாலையில் மட்டுமே பார்க்கக்கூடியப் பல்வேறு விலங்குகள் இரவில் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதை நான் காவற்கோபுரத்திலிருந்துக் கண்டேன். நீங்கள் சிலிர்ப்பு விரும்பியாக இருந்தால், இந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.2. நிகழ்ச்சியின் மற்றப் பகுதிகளை நீங்கள் இரசித்தீர்களா?

நிச்சயமாக, நான் இரசித்தேன்! நாங்கள் உணவகங்களை மதிப்பாய்வுச் செய்ய வேண்டிய ஒவ்வொரு முறையும் அனைத்து வகையானச் சுவைமிக்க உள்ளூர் உணவுகளை ருசித்தது ஒரு சிறப்பம்சமாக இருந்தது.

மலேசியா சிறந்த உணவுகளை வழங்குகிறது என்றுக் கூறுவதில் நான் பெருமையடைகிறேன். உணவைத் தவிர, உள்ளூர் மக்களைச் சந்திப்பதும் அவர்களுடன் உரையாடுவதும் நான் தனிப்பட்ட முறையில் விரும்பினேன்.

நான் சந்தித்த ஒவ்வொருவரும் தங்கள் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஊரைச் சுற்றி நடப்பவற்றைப் பற்றிப் பகிர்ந்துக்கொண்டனர். உள்ளூர் மக்களுடன் அமர்ந்து அவர்களின் கதைகளைக் கேட்பது ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது.

3. இந்த நிகழ்ச்சிக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

‘சுற்றுப்பயணம் ஆடம்பரமாக இருக்க வேண்டியதில்லை’ என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் வழங்க விரும்பிய முக்கியக் கருத்தாகும். நமதுச் சொந்த நாட்டிலுள்ள இந்த அற்புதமான இடங்களுக்கு அனைவரும் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சுற்றுப் பயணம் என்பது குறிப்பிட்ட சில இடங்களுக்குச் செல்வது மட்டுமல்ல, ஒவ்வொரு இடத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்ளவது மட்டுமல்லாமல், மேலும் பல தகவல்களை அறிந்துக் கொள்ள உள்ளூர் மக்களுடன் உரையாடுவதும் கூட என்பதை அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டுக் களிப்பதன் மூலம் அறிவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் பகிர்ந்துக் கொள்ளும் கதைகள் நிச்சயமாக உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்றும் உங்களின் பயணத்தை மிகவும் நிறைவானதாக மாற்றும் என்றும் நான் உறுதியளிக்கிறேன்.