Home நாடு பாசிர் கூடாங்: மேலும் 8 பள்ளி மாணவர்கள் நச்சுக் காற்று காரணமாக பாதிப்பு!

பாசிர் கூடாங்: மேலும் 8 பள்ளி மாணவர்கள் நச்சுக் காற்று காரணமாக பாதிப்பு!

649
0
SHARE
Ad

பாசிர் கூடாங்: இங்குள்ள மேலும் எட்டு பள்ளிகளின் மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

தஞ்சோங் புத்ரி ரிசோர்ட் இடைநிலைப் பள்ளி, தஞ்சோங் புத்ரி ரிசோர்ட் தேசியப் பள்ளி, பாசிர் புதெ 1 தேசியப் பள்ளி, பாசிர் கூடாங் 2 தேசியப் பள்ளி, தாமான் பாசிர் புதெ 1 தேசியப் பள்ளி, தாமான் மெகா ரியா இடைநிலைப் பள்ளி, தாமான் ரிந்திங் 2 தேசியப் பள்ளி மற்றும் பண்டார் ஶ்ரீ அலாம் இடை நிலைப் பள்ளி ஆகியவை இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிகளாகும்.

பாதிக்கப்பட்ட மாணவர்களைக் கொண்டு செல்வதற்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை மற்றும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சார்ந்த குறைந்தது ஒன்பது மருத்துவ வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளதை பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறித்து எதுவும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர்களை ஆரம்ப சிகிச்சைக்காக பாசிர் கூடாங் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.